புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அறிவிப்பு .
2024 ஆம் ஆண்டை பொறுத்தமட்டில், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களுக்கான அழைப்பு நவம்பரில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதற்கான காலம் 2024 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
அத்துடன், புலம்பெயர்ந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு இந்தப் புலமைப்பரிசில் வழங்கப்படுவது தொடர்பில் பாடசாலை மட்டத்தில் அறிவிக்குமாறு அதிபர்களின் கவனத்தை பணியகம் கோருகின்றது.
இந்த புலமைப்பரிசில்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையின் பெற்றோரின் பிள்ளைகளுக்கு வழங்கப்படுகின்றன. உதவித்தொகை மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இதன்படி, 5 வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு 25,000 ரூபாவும், சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு 30,000 ரூபாவும், உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் அல்லது ஏனைய பாடநெறிகளுக்குத் தகுதி பெற்ற பிள்ளைகளுக்கு 40,000 ரூபாவும் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய பிள்ளைகள் www.slbfe.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று இந்த பெறுமதியான சந்தர்ப்பத்திற்கு விண்ணப்பிக்குமாறு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை 011 2365471 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமோ அல்லது பணியகத்தின் இணையத்தளமான www.slbfe.lk ஐப் பார்வையிடுவதன் மூலமோ பெற்றுக்கொள்ள முடியும்.