அனைத்துச் சமயத்தவரின் உரிமைக்கும் உத்தரவாதம்: சிரியாவின் புதிய பிரதமர்

சிரியாவின் தற்காலிகப் பிரதமர் முகமது அல்-பஷிர் (Mohamed al-Bashir) அனைத்துச் சமயக் குழுக்களின் உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளித்துள்ளார்.
சிரியாவில் அமைந்துள்ள இடைக்கால கூட்டணி அரசாங்கத்தின் சார்பாக அவர் அந்த உத்தரவாதத்தை வழங்கினார்.
சிரியாவிலிருந்து தப்பியோடிய மில்லியன் கணக்கான மக்கள் நாடு திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அடுத்த ஆண்டு (2025) மார்ச் முதல் தேதி வரை பஷிர் பிரதமர் பொறுப்பை வகிப்பார்.
சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாதின் (Bashar al-Assad) 50 ஆண்டு ஆட்சியைக் கிளர்ச்சியாளர்க் குழு கவிழ்த்தது.
உலகெங்கிலும் உள்ள சிரிய மக்கள் ஆட்சிக்கவிழ்ப்பைக் கொண்டாடி வருகின்றனர்.
தலைநகர் டமாஸ்கஸில் உள்ள முக்கிய விமான நிலையம் அடுத்த சில நாள்களில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சுமார் 13 ஆண்டு நீடித்த உள்நாட்டுப் போரில் அரை மில்லியன் பேருக்கும் அதிகமானோர் மாண்டனர்.
ஆறு மில்லியன் பேர் அடைக்கலம் தேடி வெளிநாடுகளுக்குச் சென்றனர்.
ஆட்சிக்கவிழ்ப்பில் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதை அந்நாடுகள் அதை மறுக்கின்றன.