தெற்கு அதிவேக வீதியில் விபத்தில் 10 வயது மகள் பலி.
தெற்கு அதிவேக வீதியில் 100 ஆவது கிலோ மீற்றர் மைல்கல் அருகில் நேற்று புதன்கிழமை (11) இரவு இடம்பெற்ற விபத்தில் 10 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதுடன் தாய், தந்தை, மற்றுமொரு மகள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டாவையிலிருந்து பயணித்த கார் ஒன்று முன்னால் பயணித்த லொறி ஒன்றின் பின் புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது காரில் பயணித்த தாய் , தந்தை மற்றும் இரு மகள்களும் படுகாயமடைந்துள்ள நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 10 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இமதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.