மஹிந்தவின் , 116 பாதுகாவலர்கள் நீக்கம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த 116 பொலிஸ் அதிகாரிகள் அதிலிருந்து நீக்கப்பட்டு பொலிஸ் கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 67 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ரணில் விக்கிரமசிங்க தவிர்ந்த ஏனையவர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த மெய்ப்பாதுகாவலர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த பாதுகாவலர்களின் எண்ணிக்கை 57 ஆகவும், மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த பாதுகாவலர்களின் எண்ணிக்கை 58 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்த மதிப்பீட்டின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு பொலிஸ் கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக 67 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வைக்கப்பட்டு, ஏனையவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.