PCR சோதனை முடிவுகள் எலிக்காச்சலால் வட மாகாணத்தில் இதுவரை 7 பேர் பலி.

புயலுக்குப் பிறகு லெப்டோஸ்பிரோசிஸ் (எலிக்காய்ச்சல்) நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நோய்பற்றிய விழிப்புணர்வு வடமராட்சி மற்றும் தென்மராட்சி மக்களை சென்றடைவது மிக அவசியம்.

லெப்டோஸ்பைரோசிஸ் (எலிக்காய்ச்சல்)என்பது ஒரு பாக்டீரியாவினால் ஏற்படும் நோயாகும், இது சூறாவளி அல்லது வெள்ளத்திற்குப் பிறகு மக்கள் அசுத்தமான நீரில் நடந்து அலையும் போது அல்லது அதை குடிக்க அல்லது குளிக்க பயன்படுத்தும் போது பரவும் நோயாகும்.
பின்வரும் காரணங்களால் மக்களுக்கு லெப்டோஸ்பைரோசிஸ் பரவுகின்றது:
லெப்டோஸ்பைரோசிஸ் பாக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர்[கொறித்துண்ணிகள்(எலிகள்), நாய்கள், கால்நடைகள்ஆடு மாடு, பன்றிகள் மற்றும் வனவிலங்குகள் ]வெள்ள நீர், ஆறுகள் அல்லது ஓடைகள் போன்ற நன்னீர், பாதுகாப்பற்ற குழாய் நீர் என்பவற்றுடன் கலந்த நீரை பருகுவதால் , காயங்களில் அசுத்த நீர் படுவதால் , அசுத்த நீர் கண் வாய் மூக்கு என்பவற்றிலுள்ள சீத மென்சவ்வில் படுவதனால் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீரால் மாசுபட்ட உணவினை உண்பதால் அதில் காணப்படும் பாக்டீரியா வாய் வழியாக அல்லது காயங்கள் அல்லது கீறல்கள் ஊடாக அல்லது கண்கள், மூக்கு போன்ற மென்சவ்வினூடாக உடலினுள் செல்வதால் நோய் தொற்று ஏற்படுகிறது.

எனவே எலிக்காய்ச்சல் நோய் ஏற்படுவதை தடுப்பதற்கு

* சுத்தமான கொதித்து ஆறிய நீரை பருகவும்.
* குளம் குட்டைகளில் குளிக்க வேண்டாம் ,நீந்த வேண்டாம்,நீர் அருந்த வேண்டாம் ,வாய் கொப்பளிக்க வேண்டாம்.
* கால்களில் செருப்பு அல்லது சப்பாத்துடன் நிலத்தில் / சேற்று நிலத்தில் இறங்கவும்.
* இயலுமானவரை வெள்ளத்தில் இறங்க வேண்டாம்

இந்நோய் மனிதனில் இருந்து மனிதனுக்கு நேரடியாக பரவாது.

பக்ரீயா தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் நோய் அறிகுறிகள் ஏற்படாது . நோய் அரும்புகாலம் 5-14 நாட்கள் ஆகும் . குறைந்தளவு சதவீதத்தினர் அறிகுகளை காண்பிப்பர் பெரும்பாலானவர்கள் ஒரிரு நாள் காய்சலுடன் சுகம் அடைவார்கள் மிகஅரிதாக மரணங்களும் ஏற்படும். பிரதான அறிகுறிகள் ஏற்பட்டும் சிகிச்சை எடுக்காவிடின் அல்லது தாமதமாக வைத்தியசாலையில் சென்றால் நிச்சயம் இறப்பு ஏற்படும்.
உங்களுக்கு எலிக்காய்சல் ஏற்பட கூடிய வாய்ப்புக்கள் உள்ளது என கருதினால் நோய் ஏற்படுவதை தடுக்க வழி உள்ளது .நீங்கள் முன்னெச்சரிக்கையாக Doxycycline / சிறுபிள்ளைகள் Azithromycin மாத்திரைகள் பாவிக்கலாம் வைத்திய ஆலோசனையின் பின்பு
வடமராட்சி ,புலோலி ,முள்ளி ,வல்லை தொண்டமனாறு ,தென்மராட்சி ,வறணி ,சாவகச்சேரி பகுதிகள் மழையின் பின்னர் நீர் தேங்கி உள்ளதோடு கிணறுகளில் வெள்ளநீர் கலந்துள்ளன.

அத்தோடு இப் பகுதி வயல் பிரதேசங்களாக இருப்பதால் எலி முசுறு கால்நடைகள் காணப்படுவதோடு வல்லிபுரம் ,முள்ளியில் பன்றி வளர்ப்பும் உள்ளது .சாவகச்சேரி குருவிக்காடு பகுதியில் நரிகள் காட்டு விலங்குகள் மற்றும் அனைத்து இடங்களில் நாய்கள் எருதுகளும் உள்ளமையினாலும் , மீண்டும் கன மழைக்கு /புயலுக்கு சாத்தியம் இருப்பதனாலும் லெப்ரோபைரோசிஸ் (எலிக்காய்ச்சல்)சடுதியாக பரவகூடிய சாத்தியங்கள் இருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
காய்ச்சல் இருப்பின் உடனடியாக வைத்தியசாலையை நாடவும் .

Leave A Reply

Your email address will not be published.