அதானி காற்றாலை மின் திட்டம் குறித்து அமைச்சரவை முடிவு?

நாட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பில் அதானி நிறுவனம் அமைச்சரவையில் தமது திட்டங்களை முன்வைக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அது தொடர்பான உண்மைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையில், உண்மைகள் முன்வைக்கப்பட உள்ளன.

காற்றாலை மின் திட்டம் தொடர்பாக, மேற்படி குழு பல அம்சங்களில் இருந்து உண்மைகளை ஆய்வு செய்து பரிந்துரைகளை செய்துள்ளது.

மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 484 மெகாவாட் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்காக அதானி ஏற்கனவே சில முதலீடுகளை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்த பின்னர் அமைச்சரவை இது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் என எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.