தொலைபேசி தேசிய பட்டியல் மிகுதி 4 இடங்களும் பரிந்துரைக்கப்பட்டன
SJB தேசியப் பட்டியலில் உள்ள நான்கு உறுப்பினர்களின் பெயர்களை இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் சுஜீவ சேனசிங்க, நிசாம் காரியப்பர், மனோ கணேசன், முத்து மொஹமட் ஆகியோராவர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயர் இடம்பெறாது , SJBயின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கு பெயர்களை அனுப்புவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த முறைப்பாட்டினை பரிசீலித்த மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
SJBயின் 5 தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளில் 1 பதவி நிரப்பப்பட்டுள்ளது, ஏனையவை பற்றி விவாதங்கள் நடைபெற்று வருகையில் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது கட்சிக்காக இந்த நடவடிக்கையை எடுத்திருந்தார்.
தீர்ப்பு வெளியாகி சில மணித்தியாலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நிசாம் காரியப்பரின் பெயரை உள்ளடக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்ட பின் அதுவரையில் நடந்த விவாதங்கள் நிறைவடைந்தன.