அமெரிக்காவுடன் ஒத்துழைக்க சீனா தயார்”
சீனா, அமெரிக்காவுடன் புதிய சகாப்தத்தில் இணைந்திருப்பதற்குச் சரியான பாதைகள் குறித்து ஆராயத் தயார் என்று கூறியுள்ளது.
அமெரிக்காவுடன் ஒத்துழைக்கத் தயார் என்று சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping) கூறியதாக Xinhua செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
இரண்டு நாடுகளின் நலனும் பின்னிப்பிணைந்திருப்பதாய் அமெரிக்க வர்த்தக மன்றத்துக்குச் சீனா அனுப்பிய கடித்தத்தில் குறிப்பிட்டிருந்தது.
பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவை இருதரப்பு உறவுகளுக்கு முக்கியம் என்று அதிபர் சி கூறியதாய் கடிதத்தில் எழுதியிருந்தது.
அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் நிலையான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும் சீனா தயார் என்று திரு சி தெரிவித்துள்ளார்.