ரணில்-தினேஷ்-ட்ரான் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் இதுவரையில் கடந்த அரசாங்கத்தில் இருந்த 14 அமைச்சரவை அமைச்சர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. மேலும் 4 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் அவர்களுள் அடங்குவர்.

அடுத்த வாரத்திற்குள் இவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.