‘எமது அரசாங்கத்தில் எந்தப் பொறுப்பை வகித்தாலும் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ – ஜனாதிபதி

எவரேனும் எந்த மட்டத்திலாவது தவறிழைத்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை எந்த வகையிலும் சிதைக்க இடமளிக்க மாட்டோம் என வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்க ஊடகப் பிரதானிகளுடன் இன்று (13) காலை இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

“ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இந்நாட்டு மக்கள் வெவ்வேறு அரசாங்கங்களை உருவாக்கி வெவ்வேறு அரசாங்கங்களை கவிழ்த்துள்ளனர்.

வரலாற்றில் முதன்முறையாக இரண்டு தடவைகள் இந்த நாட்டு மக்களால் எமக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் வழங்கப்பட்ட வரலாற்று ஆணையின் பொருள் மற்றும் உட்பொருளைப் பற்றிய விரிவான வாசிப்பை இம்முறை பெற்றுள்ளோம்.

தரமான மற்றும் நிலையான நாடு உருவாகும் என்ற நம்பிக்கையில் இந்த நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசை உருவாக்கினர்.

அந்த தனித்துவமான நம்பிக்கையை ஒரு மகரந்தத்தால் கூட சேதப்படுத்த எங்கள் அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது.

சுருங்கக் கூறின், நாட்டில் தவறு செய்பவர்களை எக்காரணம் கொண்டும் பாதுகாக்க எமது அரசாங்கம் தயாராக இல்லை. நாட்டில் மட்டுமின்றி, எமது அரசில் எந்த நிலையிலும், யாராவது தவறு செய்தால், அந்தத் தவறுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். இது தொடர்பாக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் சரியான நேரத்தில் எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்.

7 தசாப்தங்களாக ஏமாற்றப்பட்ட மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தி இந்த நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு தமது அரசாங்கம் நிபந்தனையற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார மற்றும் அரச ஊடகப் பிரதானிகளின் பங்குபற்றுதலுடன் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.