எரிபொருள் தட்டுப்பாடு வருமா?

இலங்கைக்கு வந்த எண்ணெய்க் கப்பல் மீள திரும்பி சென்றுமை தொடர்பான செய்தி தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெளிவுபடுத்தியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா , குறித்த எண்ணெய் தாங்கி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் தாங்கி அல்ல, அதனால் நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் 15,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 15,000 மெட்ரிக் டன் டீசல் கொண்ட எண்ணெய் டேங்கரை கொண்டு வந்தது. அந்த எண்ணெயை கப்பல் இறக்காமல் திரும்ப சென்றுள்ளது. உண்மையில், அது பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் கொண்டுவரப்பட்ட கப்பல் அல்ல என்பதால், அது நாட்டைப் பாதிக்காது. கடந்த காலங்களில், இலங்கையில் எண்ணெய் வர்த்தகம் செய்ய மூன்று நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது, பின்னர் அவர்கள் தனித்தனியாக எண்ணெயைக் கொண்டு வந்தனர். உள் பிரச்னை காரணமாக இந்த எண்ணெய் டேங்கர் இறக்கப்படாமல் திரும்ப எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை எண்ணெய் ஆர்டர் செய்துள்ளோம் என தெளிவுபடுத்தினார் இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா .

Leave A Reply

Your email address will not be published.