அசோக ரன்வல, NAITA மூலம் எண்ணெய் கூட்டுத்தாபனத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப அதிகாரி – பாட்டலி சம்பிக்க
அசோக ரன்வல, NAITA தொழிற்பயிற்சி சபையில் இருந்து வந்து எண்ணெய் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப அதிகாரி மாத்திரமே என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஆனால் அசோக ரன்வல கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்ட மக்களை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் இரசாயன பொறியியல் பட்டதாரி என்றும் , ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டதாரி என்றும் பொய் கூறி ஏமாற்றியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாமல் ராஜபக்ச, மர்வின் சில்வா பட்டங்களை பார்த்து JVPயினர் சிரித்ததாகவும் , சாமர சம்பத் இரண்டாம் வகுப்புக்கு சென்ற அறிவிலியாக அவர்களை பார்த்து சிரித்ததாகவும் பாட்டலி சம்பிக்க நினைவு கூர்ந்தார்.
சாமர சம்பத் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, தான் படிக்காதவர், ஆங்கிலம் பேசத் தெரியாதவர், வடை விற்றுத் திரிந்தவர் என கூறிய நேர்மையை பாட்டலி சம்பிக்க குறிப்பிட்டு,அந்த நேர்மை அசோக ரன்வலலாவிடம் இல்லை என்றார்.
சாமர சம்பத்தை பார்த்து இரண்டாம் வகுப்புக்கு தான் போனவர் என சிரித்த இவர்கள், சாமர சம்பத்தை விட வக்கிரமானவர்கள் என்றார்.