டோச்சரினால் இறந்தவர்களது சடலங்கள்; அசாத்தின் ஆட்சியின் குற்றங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன
சிரிய எதிர்ப்புப் போராளிகள் டமாஸ்கஸைக் கைப்பற்றியதும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்புக்காக மாஸ்கோவிற்குத் தப்பிச் செல்லும்போது, அசாத்தின் ஆட்சியின் குற்றங்கள் தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன.
சமீபத்தில், சிரியாவின் சவக்கிடங்கில் பலத்த காயங்களுடன் இறந்தவர்களது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன மற்றும் சவக்கிடங்கின் ஊழியர் டாக்டர் அகமது அப்துல்லா, அசாத் ஆட்சியைக் குற்றம் சாட்டி, இது ஆட்சியின் குற்றம் என்றும் அத்தகைய தண்டனைகள் இடைக்காலத்தில் கூட செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா கமிஷன் அறிக்கையின்படி, சிரிய ஆட்சி பல்லாயிரக்கணக்கான மக்களை வெகுஜன புதைகுழிகளில் புதைத்ததாக கூறப்படுகிறது. சைட்னயா சிறையில் ஒரு தகன மையம் கட்டப்பட்டதற்கான ஆதாரத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை 2017 இல் வெளியிட்டது, மேலும் அவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 50 கைதிகள் கொல்லப்பட்டதாக மதிப்பிட்டுள்ளனர்.
இந்த உண்மைகள் வெளியாகியுள்ள நிலையில், சிரியாவின் பல பகுதிகளில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் ஊருக்குள் திரண்டு வரும் நிலையில், பல வருடங்களாக குடும்பத்தினருக்கு கைதானோர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.