நீர்க்கொழும்பு – கொழும்பு வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவிப்பு!
நாளை (14ஆம் திகதி) இரவு 7 மணி முதல் நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வத்தளை பொலிஸ் பிரிவில் உள்ள ஹெந்தல புராண ரஜமஹா விகாரையின் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி பெரஹர நாளை (14) இரவு 7 மணி முதல் மறுநாள் (15) காலை வரை நடைபெறவுள்ளதால், அந்த நேரத்தில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஹெந்தல புராண ரஜமஹா விகாரையிலிருந்து ஆரம்பமாகி ஹெந்தல வீதியூடாக ஹெந்தல சந்தி வரை பயணித்து கொழும்பு – நீர்கொழும்பு வீதியின் ஊடாக பழைய நீர்க்கொழும்பு வீதி ஊடாக பயணித்து மீண்டும் கொழும்பு நீர்க்கொழும்பு பிரதான வீதிக்கு பிரவேசித்து அல்விஸ் டவுன், ஹெந்தல சந்தி ஊடாக மீண்டும் விகாரைக்கு செல்லவுள்ளது.