புதிய சபாநாயகர் நியமனம் குறித்து நாடாளுமன்றம் அறிவிப்பு
புதிய சபாநாயகர் டிசம்பர் 17ஆம் திகதி நியமிக்கப்படுவார் என நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி சபாநாயகர் பதவி வெற்றிடமானால், நாடாளுமன்றக் கூட்டத்தின் முதல் நாளிலேயே சபாநாயகரை நியமிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அசோக ரன்வல தனது கல்வித் தகுதி தொடர்பான சர்ச்சையால் பதவியை ராஜினாமா செய்தார்.
பாராளுமன்றம் டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் கூடவுள்ளது.