சபாநாயகராக சிலர் வரிசையில் தயாராக உள்ளனர்…
வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஓரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பட்டி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி ஆகியோர் இவ்வாறு முன்மொழியப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை எனவும், அடுத்த சில தினங்களில் இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அங்கு முதலில் புதிய சபாநாயகர் நியமிக்கப்படுவார்.