விகாரை அமைக்கப்படும் யாழ், தையிட்டி பகுதியில் பதற்றம்.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக்கோரி தையிட்டியில் பதற்றம்! பொலிஸார் – முன்னணி முறுகல்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக்கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அந்தக் கட்சியினருக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் போக்கு ஏற்பட்டது.

இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அத்தோடு, பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி குவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் இன்று சனிக்கிழமை மாலை வரை போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையிலேயே இன்று மாலை முன்னணியினருக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

இந்தப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருந்தபோது உரிய அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்தை அகற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.