லண்டனின் டிரினிட்டி லாபான் இசைப்பள்ளியின் கெளரவத் தலைவராக ஏ.ஆர். ரகுமான் நியமனம்.
இந்திய சினிமாவில் இசைப்புயலாக வலம் வரும் ரகுமான், ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி, இரண்டு ஆஸ்கர் விருதுகள் உள்ளிட்ட பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளார்.
உலகளவில் புகழ்பெற்ற அவரது இசையமைப்பு திறனுக்கான இந்த அங்கீகாரம், டிரினிட்டி லாபானின் மாணவர்களுக்கும், தங்கள் பாடத்திட்டத்திற்கும் புதுமையான இணைப்பை உருவாக்கும் என பள்ளி தெரிவித்துள்ளது. இந்த பதவியில் ரகுமான் 5 ஆண்டுகள் பணியாற்றுவார்.