அகற்றப்பட்ட இன்னொருவரது கலாநிதி பட்டம்.

பாராளுமன்ற இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் ஒன்றும் குறிப்பிடப்பட்டு நீக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற இணையத்தளத்தில் நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் வழங்கிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின் படி ஹர்ஷன் நாணயக்கார தனிப்பட்ட முறையில் கௌரவப் பட்டம் குறித்த கடிதத்தை கையளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணையத்தளத்தில் உறுப்பினர்களின் விபரங்கள் சரியாக பதியப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், இணையத்தளத்தில் தவறாக பதியப்பட்டுள்ள சில தகவல்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் இணையத்தள பொறுப்பதிகாரிகளுக்கு பாராளுமன்ற தலைவர்கள் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் அநுர கருணாதிலக்க, களனிப் பல்கலைக்கழகத்தின் கணிதப் பிரிவில் சிரேஷ்ட விரிவுரையாளராவார். அவர் கலாநிதி பட்டம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் , அவர் இன்னும் பட்டப்படிப்பை பூர்த்தி செய்யவில்லை என தகவல் கிடைத்துள்ளது.
இதனால், இணையதளத்தில் தவறாக பதிவு செய்யப்பட்ட சில தகவல்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.