ஜனாதிபதியின் இந்திய சந்திப்பு!
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் (Dr.S.jayashankar) மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் (Shri Ajith Doval) ஆகியோர் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர்.
ஜனாதிபதி மற்றும் இந்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதா ராமன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில், இந்திய-இலங்கை பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், இலங்கைக்கு அதிகமான இந்திய சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவது, விவசாய நவீனமயமாக்கல் மற்றும் இலங்கையில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு மிகவும் சுமூகமாக இடம்பெற்றதுடன், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த இந்தியாவின் பாரிய சந்தையைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.