இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உடனான சந்திப்பு.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பிரதமர் திருமதி கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் மூலோபாய கூட்டுறவை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமைந்தது.
தற்போது பல்வேறு கட்ட வளர்ச்சியில் உள்ள பல இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.