07. இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும் : வெற்றிச் செல்வன்
இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும் – வெற்றிச் செல்வன்
பகுதி 07
சந்ததியார் மாறன் போன்றவர்கள் சிறையில் இருப்பவர்களை மீட்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் செல்வாக்கான தலைவர்களை போய் பார்ப்பதும் வருவதுமாக இருந்தார்கள். புலவர் புலமைப்பித்தன் எம்ஜிஆருக்கு மிக மிக நெருங்கியவராக, இருந்தாலும் அவர் முகுந்தன் மற்றவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் தான் தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்ஜிஆர் அரசுக்கு எதிராக போராடுவேன் என கூறினார்.
எம்ஜிஆர் அரசின் மந்திரியாக இருந்த காளிமுத்து ஒரு படி மேலே போய், சிறையில் இருப்பவர்களை விமானத்தில் திருப்பி அனுப்பினால் தான் பறந்து போய் தடுப்பேன் எனக் கூறியதோடு அதை ஒரு கவிதையாகவும் படித்து பத்திரிகைகளுக்கு கொடுத்திருந்தார். அடுத்து என்ன நடக்குமோ என்ற மனநிலையோடு நாங்கள் எங்கள் வேலைகளைத் தொடர்ந்து செய்தோம். இக்காலகட்டத்தில் தமிழ்நாட்டின் சிறந்த தமிழ் அறிஞர் அருளி அவர்கள்பிறர் தொந்தரவு இல்லாமல் தமிழ் ஆராய்ச்சி புத்தகத்தை எழுத எங்களோடு வந்து தங்கியிருந்தார்.
அவர் தமிழ்ச் சொற்கள் பிற வெளிநாட்டு மொழிகளோடு எப்படி அடிப்படையாக இருந்தது என்று எழுதும்போது எங்களுக்கும் விளங்கப்படுத்தினார். சந்ததியார் , மொழி ஆராய்ச்சி பற்றி அருளியோடு நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார்.
நாங்கள் எமது அலுவலகத்தில் நாங்களே சமைப்பதற்கு உரிய வேலைகளைப் பார்க்கத் தொடங்கினோம் அருளி அண்ணாவும்உதவி செய்தார். பகல் உணவு மட்டும் தயார் செய்தோம். சோறு, பருப்பு கறி அல்லது மாட்டு இறைச்சி இதுதான் நாங்கள் சமைத்து சாப்பிடுவது.சந்ததியாருக்கு நாங்கள் பருப்பு கறி சமைத்து இருந்தாள். இருந்து பகல்சாப்பிட்டு விட்டுத்தான் போவார்.
சாப்பாட்டில் உப்பு புளி இல்லாவிட்டாலும் எங்களைஎங்களை பாராட்டி சாப்பாடு நன்றாக இருக்கிறது என்று அவர் சாப்பிடும் நாட்களில் கூறித் தான் செல்வார். அவர் அப்படிச் சொல்வது எமக்கு சந்தோஷத்தை கொடுக்கும். மாறன் ,கந்தசாமி சிலவேளைகளில் என்ன அடிக்கடி காலையில் வந்து மாட்டு இறைச்சி வாங்கி தந்து போவார்கள்.வேலைகளையும் முடித்துவிட்டு வந்து பகல்சாப்பிட்டு விட்டுத்தான் போவார்கள்.
தமிழ்நாடு காவல்துறை எங்களை கண்காணித்துக் கொண்டிருந்தாலும் எங்களுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்கவில்லை ஆனால் உளவுத்துறை டிஜிபி மோகனதாஸ் உமா மகேஸ்வரன் மற்றும் தோழர்களை இலங்கைக்கு பிடித்துக் கொடுப்பது பற்றியே தீவிரமாக இருந்தார்.
அதே நேரம் மத்திய உளவுத்துறை IB உயர் அதிகாரிகள் இருவரும் எங்களை வந்து சந்தித்து நிலைமைகளை செய்திகள் சேகரித்து செல்வார்கள். அவர்கள் எங்களிடம் உளவுத்துறை என்று கூறாமல் மத்திய உள்துறை அமைச்சகம் என்றுதான் கூறுவார்கள் உண்மையும் அதுதான். மத்திய உள்துறையின் கையில்தான் IB இயங்கியது.
நாங்கள் இவர்களின் முக்கியத்துவம் அறியாமல் இவர்களை அலட்சியமாக தான் நடத்தினோம். ஆனால் இந்த இரண்டு தமிழ் அதிகாரிகளும் மிகமிக நேர்மையானவர்கள். இவர்களின் ஆரம்ப கால அறிக்கைதான் இந்திரா காந்திக்கு போன முதல் ரிப்போர்ட். ஆனால் நாங்கள் தமிழ்நாடு காவல்துறை உளவுத்துறைக்கு மிக பயந்தோம்.
சிறையில் இருப்பவர்கள் இலங்கைக்கு நாடு கடத்த படுவார்கள் என்ற வதந்திகள் பரவிக் கொண்டிருந்த நேரம். சந்ததியார் இடம் மாறன் ,கந்தசாமி பல ஆலோசனை செய்து முகுந்தனை மட்டுமாவது வழக்குக்காக திருவள்ளூர் கோர்ட்டுக்கு கொண்டுபோகும் போது அல்லது திரும்ப வரும்போது தாக்குதல் நடத்தி மீட்பது என ரகசிய திட்டம் போட்டார்கள்.
இதைபற்றி கேள்விப்பட்ட கணபதிஎதிர்த்தார் காரணம் அவர்தான் வழக்கமாகப் கோர்ட்டுக்குப் போய் வருவது அது எல்லோருக்கும் தெரியும்.
மாறன் என்னை கூட்டிக்கொண்டு போய் பல நாட்கள் சென்னை மத்திய சிறைச்சாலையின் வெளியில் பார்வையாளர்கள் இருக்கும் இடத்தில் நிறுத்தி விடுவார். எனது வேலை சிறைக்காவலர்கள் மாறும் நேரத்தை தினசரி பதிவு செய்வது எத்தனை பேர் கைதிகளை எந்த வாகனத்தில்கூட்டிப் போகிறார் கள் எத்தனை போலீசார் போகிறார்கள் என்பது போன்ற தரவுகளை எடுக்கச் சொன்னார்கள்.
உண்மையில் அன்று அது எனக்கு மிகப் பெரிய சாகசம் போல் தோன்றியது. இன்று நினைக்கும் போது அது எவ்வளவு பெரிய சிறுபிள்ளைத்தனம் என்று நினைக்கத் தோன்றுகிறது. என்ன காரணமோ இந்த திட்டம் கைவிடப்பட்டு சந்ததியார் விடா முயற்சியாக அரசியல் வாதிகளை சந்திக்கும் ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.
நான் மாறன் கந்தசாமி மாதவன் அண்ணா மத்திய ஜெயிலுக்கு உமா மகேஸ்வரன் மற்றவர்களை பார்க்க போய் வருவோம். தினசரி மாறன் அல்லது கந்தசாமி போய் வருவார்கள் சில வேலைகளைப் பற்றி கதைப்பது ஆயின் என்னை அல்லதுமாதவன் அன்னையை வரச்சொல்லி நாங்கள் செய்ய வேண்டிய வேலைகளையும் பற்றி பேசுவார்.
சந்ததியார் இந்தியாவந்த பின்பு முதன்முறையாக உமா மகேஸ்வரனைசந்திக்க போகும்போது நானும் கூட போனேன். நாங்கள் அவர்களை சிறையில் சந்திக்கும் போது என்னை தள்ளிப்போய் நிரஞ்சன்உடன் பேசிகொண்டு இருக்கும் படி கூறினார். நிரஞ்சன் என்னிடம் ரகசியமாக பெரியவருக்கும் தனக்கும் உள்ளே சரியான சண்டை எனவும் சண்டையை கண்ணன் தனக்கு எதிராக தூண்டி விடுவதாகவும் கூறி கவலைப் பட்டார்.
அதேநேரம் சந்ததியார் உமாமகேஸ்வரன் இடம் வாங்கி கட்டிக் கொண்டிருந்தார். இரண்டு விஷயங்கள் சம்பந்தமாக, முதலாவது இறைகுமாரன் உமைகுமரன் கொலை, வவுனியாவில் வைத்து விமானப்படை வீரர்கள் மீது தாக்குதல்.
எமது இயக்க முக்கிய தளமாக இருக்கும் வவுனியாவில் வைத்து தாக்குதல் விமானப்படை வீரர்கள் மீது செய்யும்போது வவுனியாவில் எமது செயற்பாடுகள் எல்லாம் அழிந்து விடும் என்று கடுமையாக சந்ததியாருடன் வாக்குவாதம் செய்தார். நாங்கள் இருவரும் பலவித மன குழப்பத்தில் வீடு திரும்பினோம்.
எங்களிடம்பல நண்பர்கள் கலைஞரை நேரடியாக சந்தித்து இதைப் பற்றி பேசும் படி கூறினார் சந்ததியார்கலைஞரை சந்தித்தார். இதன் பின்பு நடந்த செய்திகளை நான் முன்பே ஒரு பதிவு போட்டுள்ளேன் . அதைப் பின்பு எட்டாவது பதிவாக போடுவேன்.
தொடரும் ……