சஜித்தை விட்டு வெளியேறும் ஜகத் குமார.
சஜித் பிரேமதாச வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதன் காரணமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார உள்ளிட்டோர் SJBல் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.
இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களின் அரசியல் எதிர்காலம் தொடர்ந்தும் SJBல் நீடிப்பதன் மூலம் அவர்களின் அரசியல் எதிர்காலம் சிதைந்து விடக்கூடாது என்பதற்காகவே தமது கட்சி உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் உடன் இணைந்து இந்த தீர்மானத்தை எடுத்ததாக ஜகத் குமார மேலும் தெரிவித்தார்.