பொலிஸ் உத்தியோகத்தர்களை கண்ணாடி போத்தலால் தாக்கி விட்டு தப்பியோடிய மூவரும் பொலிஸாரிடம் மாட்டினர்!
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை கண்ணாடி போத்தலால் தாக்கிவிட்டு தப்பியோடிய மூன்று இளைஞர்களை தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது நேற்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் பின்வருமாறு.
கிளிநொச்சி பரந்தன் வீதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்ணில் , தலைக்கவசம் அணியாமல் ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணிப்பதைக் கண்டுள்ளனர்.
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியது தவறு எனக் கூறி பொலிஸ் உத்தியோகத்தர்கள் சட்டத்தை அமுல்படுத்த சென்ற போது, மூன்று இளைஞர்களில் ஒருவர் கண்ணாடி போத்தலால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார்.
தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் 3 வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மூவரும் அதிகளவில் குடிபோதையில் இருந்ததாக தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.