இபோச பேருந்தில் அடிபட்டு பெண் மரணம்.. ஓட்டுநரை தாக்கிய மக்கள்.

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி இயங்கும் ஹட்டன் இபோச டிப்போவிற்கு சொந்தமான பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய நபர்களை முறையான விசாரணைகளை மேற்கொண்டு கைது செய்யுமாறு ஹட்டன் இபோச டிப்போவின் கட்டுப்பாட்டு அதிகார சபை வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் கோரியுள்ளது.

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி ஓடும் இபோச பேருந்து வெல்லம்பிட்டிய கொட்டிகாவத்தை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ​​அதற்கு முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் பிரதான வீதியின் குறுக்கே சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளான போது அதில் பயணித்த பெண் மீது பேருந்து எறி , பெண் மரணித்துள்ளார் .

இதை கண்ணுற்ற சாலையின் அருகே இருந்த மக்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் கோபமடைந்து அவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

பஸ்ஸின் சாரதி தன்னைத் தாக்க வேண்டாம் என கெஞ்சிய போதும், மக்கள் அவரைத் தொடர்ந்து தாக்கியதனால், சாரதிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பேருந்தின் சாரதி வெல்லம்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்ட போதிலும் வெல்லம்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் , சாரதியை அழைத்துச் மருத்துவமனைக்கு செல்லவில்லை.

விபத்து தொடர்பான சட்டத்தை உரிய முறையில் நிறைவேற்றுவது பொலிஸாரின் பொறுப்பாகும் என டிப்போ கட்டுப்பாட்டு அதிகாரசபை கூறியதுடன், அந்த பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றிய போதிலும், விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்த சிலர் சாரதியையும் , நடத்துனரையும் , தாக்கியுள்ளதை வன்மையாக கண்டித்துள்ளார்.

சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வெல்லம்பிட்டி காவற்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஹட்டன் இபோச டிப்போ ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

அந்த பேருந்தில் இருந்த பயணி ஒருவர் சாரதியையும் , நடத்துனரையும் , தாக்கியதை செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.