ஜப்பானிய நிறுவனம் கொழும்பு கப்பல்துறையிலிருந்து வெளியேறுகிறது.
Colombo Dockyard நிறுவனத்தின் 51% பங்குகளை வைத்திருக்கும் ஜப்பானின் Onomichi Dockyard நிறுவனம் வெளியேற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கொழும்பு கப்பல்துறை நிறுவனத்திற்கு நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து தனது முக்கிய பங்குதாரர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளது.
இந்நிலைமையின் அடிப்படையில், புதிய மூலோபாய பங்காளிக்கான ஆரம்ப கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு கப்பல்துறை பணிப்பாளர் சபை பங்குதாரர்களுக்கு அறிவித்துள்ளது.