உத்தரபிரதேச மாநிலத்தில் இந்து நண்பருடன் பேசிய சிறுமிகள் மீது தாக்குதல்!
இந்து நண்பருடன் பேசிய சிறுமிகள் மீது தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் தியோபந்த் என்ற பகுதி உள்ளது. இங்கு ஹிந்து மதத்தை சேர்ந்த ஒரு ஆண் நபருடன் இஸ்லாமிய சிறுமிகள் இருவர் பேசியதாக கூறி மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான தொடர்பான வீடியோ கட்சிகள் மூக வலைதளங்களில் வைரலானதால் இது வெளிச்சத்திற்கு வந்தது. இதில் சம்பந்தம் இருப்பதாக 38 வயதான முகமது மெஹ்தாப் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சுமார் 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள், பைக்கில் பயணித்த ஒருவரிடம் வழி கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் இந்து ஆண் நண்பரிடம் பேசியதாக கூறி தாக்கி உள்ளனர். மேலும், அவர்கள் அணிந்திருந்த ஹிஜாபையும் கழட்ட வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவ இடத்தில் மக்கள் கூடியுள்ளனர். இந்து நபரிடம் சிறுமிகள் பேசினார்கள் என்ற விஷயம் பெரிதாகியுள்ளது. அந்த சமயம் சிறுமிகள் தங்களது சகோதரரை அண்ணனை அழைக்க, சிறுமிகள் போனை எடுத்தபோது, அந்த கும்பல் அதை பிடுங்கி எறிந்துள்ளது.
மேலும், அந்த சிறுமிகள் இளைஞரிடம் பரிசு கொடுத்ததாகவும் மர்ம கும்பல் குற்றம் சாட்டியது. இந்த நிலையில், பைக் ஓட்டிய அந்த இளைஞர் இந்து இல்லை என்று தெரிந்த பிறகுதான் மர்ம கும்பல் சிறுமிகளை விடுவித்தது. அங்கிருந்து தப்பிய சிறுமிகள் போலீசில் புகார் அளித்தனர்.
அவர்களில் ஒருவர்,” தன்னை மர்ம கும்பல் அடித்து ஹிஜாபை கழற்ற முயன்றதாக” கூறினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஒருவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மற்றவர்களைக் கைது செய்யும் முயற்ச்சியில் போலீசார் ஈடுப்பட்டு வருகின்றனர்.