யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது
யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் சவுக்கு சங்கர் தங்கியிருந்தபோது அவரது காரில் இருந்தும் அவரது உதவியாளரிடம் இருந்தும் தடை செய்யப்பட்ட 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கரின் தயார் முறையிட்டதை தொடர்ந்து, குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு சவுக்கு சங்கர் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை போலீஸார் அவரை கைது செய்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.