அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் – 15 வயதுப் பெண்.

அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுபவர் அங்கு பயின்ற பதின்ம வயது மாணவி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

15 வயது மாணவி நடத்தியதாகக் கூறப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் மாண்டனர். அவர்களில் ஒருவர் மாணவர். இன்னொருவர் ஆசிரியர்.

6 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாய் உள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. சந்தேக நபரின் குடும்பத்தினர் காவல்துறை விசாரணையில் உதவி வருகின்றனர்.

தகவலறிந்து காவல்துறையினர் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பே துப்பாக்கியால் சுட்டதாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணும் மாண்டதாகத் தெரிகிறது.

அதிகாரிகள் எவரும் துப்பாக்கியால் சுட்டதாகத் தகவல் இல்லை.

Leave A Reply

Your email address will not be published.