WhatsApp முதலீட்டு மோசடியில் மலேசிய RM704,000 இழந்த முதியவர்.
WhatsAppஇல் முதலீட்டு மோசடியில் மலேசிய முதியவர் ஒருவர் 704,000 ரிங்கிட்டை (சுமார் 210,000 வெள்ளி) இழந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் 73 வயது வர்த்தகர் என்று திரெங்கானு மாநிலக் காவல்துறை தெரிவித்தது.
Saham L-5 Cicc Investment எனும் முதலீட்டுத் திட்டத்தின்வழி நிறைய லாபம் பெறலாம் என்ற வாக்குறுதியை நம்பி அவர் அதில் சேர்ந்தார்.
முதலீட்டுக்காக 3 வெவ்வேறு வங்கிகளில் 10 கணக்குகளில் அவர் பணத்தைச் செலுத்தினார்.
ஆனால் அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. அப்போதுதான் அது மோசடி என்பதை உணர்ந்து காவல்துறையிடம் புகார் தந்தார்.
விசாரணை நடைபெறுவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.