இறுதி டெஸ்டில் நியூசிலாந்து அணி, 423 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. கோப்பையை கைப்பற்றியது .
வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து அணி, 423 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. நியூசிலாந்து சென்ற இங்கிலாந்து அணி 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் இரு டெஸ்டில் வென்ற இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது. மூன்றாவது டெஸ்ட் ஹாமில்டனில் நடந்தது.
முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 347, இங்கிலாந்து 143 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 453 ரன் எடுத்தது. பின் 658 ரன் எடுத்தால் வெற்றி என, இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து மூன்றாவது நாள் முடிவில், 18/2 ரன் எடுத்து 640 ரன் பின் தங்கி இருந்தது.
நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. பெத்தெல், ஜோ ரூட் இணைந்து போராடினர். இருவரும் அரைசதம் கடந்தனர். 3வது விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்த போது, ஜோ ரூட் (54) அவுட்டானார். ஹாரி புரூக் 1 ரன்னில் திரும்பினார். பெத்தெல் 76 ரன்னில் அவுட்டாக, அட்கின்சன் 43 ரன் எடுத்து ஆறுதல் தந்தார்.
சான்ட்னர் சுழலில் பாட்ஸ் (0), கார்ஸ் (11) வீழ்ந்தனர். தொடை பின்பகுதி காயத்தால் கேப்டன் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்ய வரவில்லை. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 234 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. நியூசிலாந்தின் சான்ட்னர், அதிகபட்சம் 4 விக்கெட் சாய்த்தார். இருப்பினும் இங்கிலாந்து 2-1 என தொடரை வென்று, கோப்பை கைப்பற்றியது.
டெஸ்ட் அரங்கில் ரன் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றி என்ற தனது முந்தைய சாதனையை சமன் செய்தது நியூசிலாந்து. நேற்று 423 ரன்னில் வென்றது. 2018ல் இலங்கைக்கு (ஹாமில்டன்) எதிராகவும் இதுபோல, 423 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
முந்தைய டெஸ்டில் 300 ரன் வித்தியாசத்திற்கும் மேல் (323) தோற்று, அடுத்த டெஸ்டில் 300 ரன்னுக்கும் மேல் வெற்றி பெற்ற முதல் அணியானது நியூசிலாந்து.
நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தீ 36. கடந்த 2008ல் 19 வயதில் அறிமுகம் ஆனார். டெஸ்டில் 391 (107 போட்டி), ஒருநாள் அரங்கில் 221 (161ல்), சர்வதேச ‘டி-20’ல் 164 (126ல்) விக்கெட் சாய்த்துள்ளார். அதிக விக்கெட் சாய்த்த நியூசிலாந்து பவுலர்களில் ஹாட்லீக்கு (431) அடுத்து, இரண்டாவதாக உள்ளார்.
வெலிங்டன் போட்டியுடன் டெஸ்ட் அரங்கில் இருந்து விடைபெற்றார். அவர் கூறுகையில்,” சிறுவனாக இருந்த போது, நியூசிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் வளர்ந்தேன். தற்போது 776 விக்கெட் சாய்த்துள்ளது திருப்தியாக உள்ளது. உண்மையில் இது மிகவும் ஸ்பெஷலான தருணம்,” என்றார்.