கிளிநொச்சி A9 வீதியில் கடத்திச்செல்லப்பட்ட இளம்பெண்
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 26 வயதுடைய யுவதி ஒருவர் நேற்று (17) இரவு கிளிநொச்சி கனகாம்பிக்குளம் பகுதியில் வைத்து இனந்தெரியாத சிலரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவான் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இந்த யுவதி கிளிநொச்சி நகரிலுள்ள அழகு நிலையமொன்றில் பணிபுரிவதால் இரணமடு பகுதியில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்துள்ளார்.
வேலை முடிந்து விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த கடத்தல் நடந்துள்ளது.
இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது, யுவதி பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கைப்பை மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.