அதிருப்தி கொண்ட முகத்தோடு ஓய்வை அறிவித்தாரா அஷ்வின்?
முதல் போட்டியில் ஆடும் லெவனில் எடுக்காத போதே, போட்டியின் நடுவே ஆஸ்திரேலியா வந்த ரோகித்தை அழைத்து ஓய்வு முடிவை தெரிவித்து இருக்கிறார் அஷ்வின்
தற்போதைய நிலையில் அணிக்கு என்னுடையத் தேவையில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார்
ஆனால் அடுத்த பிங்க் பால் போட்டியில் நீங்கள் ஆடலாம் என நம்பிக்கை அளித்து ரோகித் ஓய்வு முடிவை தள்ளிப்போட்டிருக்கிறார்
பிங்க் பால் போட்டி தோல்வியில் முடியவே, இப்போட்டியில் அவர் ஆடாதது மேலும் வருத்தத்தை அளித்திருக்கும் என்று தெரிகிறது
மேலும் அணியில் வாஷிங்டன், அக்சர் போன்றவர்கள் நல்ல பேட்டிங் திறமையுடன் இருப்பதால், அவர்களுக்கு வழிவிடலாம் என நினைத்தாரோ என்னவோ, ஓய்வை அறிவித்துவிட்டார்.