10. இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும் : வெற்றிச் செல்வன்
பகுதி 10!
இக் காலகட்டத்தில் பல முக்கிய சம்பவங்கள் நடக்கத் தொடங்கி விட்டன. இந்திய அதிகாரிகள் ஆயுதபயிற்சிகள் ஏற்பாடு செய்து தருவதாக உமாவிடம் கூறியதால் தளத்தில் வேலை செய்த தோழர்களுக்கு விபரம்அறிவிக்கப்பட்டு இந்தியாவுக்கு., பயிற்சிக்காக தோழர்கள் அனுப்பப்பட்டார்கள்.
எமது கழக நிர்வாகம் தூங்க,சாப்பிட நேரமில்லாமல் ஓடி திரிந்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் எம்ஜிஆர் அடிக்கடி தனது ராமாபுரம் தோட்டத்துக்கு உமா மகேஸ்வரனை அழைத்துப் பேசுவார்.
காரணம் கலைஞருடன் நெருக்கமாக கூடாது என்ற நோக்கத்தோடு தான். ஆனால் தஞ்சாவூரில் சேர்ந்த அதிமுக மந்திரி எஸ்டி சோமசுந்தரம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனது ஆதரவாளர்களை எங்களுக்கும் முகாம்போட சகல உதவிகளும் செய்யச் சொல்லி எமக்கு மிக மிக உதவி செய்தார். அதோடு சென்னையில் இருந்த தனது அதிகாரபூர்வ அரசு வீட்டில் சென்னை வந்த எமது தோழர்களை தங்கவும் வைத்து இருந்தார்
எம்ஜிஆர் கலைஞருக்கு எதிராக ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். அதாவது இந்தியாவிலிருந்து கலைஞர் ஆட்சியில் குட்டிமணியை நாடு கடத்தாமல் இருந்தால் குட்டிமணி வெலிக்கடை சிறையில் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார் என்று. உடன் அரசு ஆதரவு பற்றிய பத்திரிகைகள், எம்ஜிஆர் ஆதரவுத் தலைவர்கள் கலைஞர் கருணாநிதியை துரோகி எனவசை பாடத் தொடங்கினார்கள். உண்மையில் அது நடந்தது 1972 ஆம் ஆண்டு அல்லது 1974ஆம் ஆண்டு என நினைக்கிறேன்.
அப்போது பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மத்திய அரசால் இலங்கைக்கு அனுப்பப் பட்டார்.அப்போது குட்டிமணியை இலங்கையில் கூட கடத்தல்காரர் என்ற அளவில்தான் சிலருக்குத் தெரிந்திருந்தது. பலபேருக்கு குட்டிமணி என்ற பெயர் கூட தெரியாது.
இந்தநிலையில் கலைஞருக்கு நெருக்கமான தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் டெலோ இயக்கத்தின் இரட்டைதலைவர்களான ஸ்ரீ சபாரத்தினம் மற்றும் ராசுபிள்ளை ஆகியோரை கலைஞரிடம் அழைத்துப்போய் கலைஞருக்கு ஆதரவாக அறிக்கை விட வைத்தார்.
அதில் குட்டிமணி அந்த காலத்தில் தன்னை ஒரு விடுதலை இயக்கப் போராளி என்று பகிரங்கமாய் தெரிவதை விரும்பவில்லை என்றும் அதனால்தான் இந்தியாவில் தன் கைது செய்யப்படும் போது தன்னை ஒரு கடத்தல்காரன் ஆக காட்டிக் கொண்டார் என்றும் அறிக்கையில் இருந்தத. அதோடு கலைஞருக்கு ஆதரவாக குட்டிமணியின் மனைவியின் கடிதத்தையும் பத்திரிகைகளில் வெளியிட்டார்கள்.
அன்றிலிருந்து எம்ஜிஆருக்கு சிறி சபாரத்தினம் telo இயக்கமும் எதிரியாகி விட்டனர். எம்ஜிஆரை தவறான வழியில் இட்டுச் சென்றது உளவுத்துறை ஐ.ஜி திரு . மோகனதாஸ் அவர்கள். மத்திய அரசு மத்திய உளவுத் துறைகளால் IB மற்றும் ரா மட்டுமே தமிழ்நாட்டில் இலங்கை சம்பந்தப்பட்ட வேலைகளை தொடர்புகளை கையாண்டன.
தமிழ்நாட்டு போலீசாருக்கு உளவுத்துறைக்கு அனுமதி இருக்கவில்லை. இது தமிழ்நாட்டு மிகப் ஃபுல்லான அதிகாரி மோகன்தாஸ் மிக கோபமாக இருந்தார். அதனால்தான் எம்ஜிஆரை தவறாக வழி நடத்துவதாக நடுநிலையான அண்ணா திமுக மந்திரிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் நாங்கள் அவர்களுடன் பேசும்போது கருத்துகளைச் சொன்னார்கள்.
ரா, சந்திரஹாசன் மூலம் ஈபிஆர்எல்எஃப், telo, ஈரோஸ் அமைப்புகளை பயிற்சிக்காக தொடர்பு கொண்டு பயிற்சி கொடுக்கத் தொடங்கினார்கள். இந்திய பயிற்சிகள் நடக்கப் போவதை அறிந்த எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் திடீரென மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தனது மகன் பகீரதன் தலைமையில் ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்கி பெயர் கூட tena என நினைக்கிறேன்.
இதற்கு அமிர்தலிங்கத்தை திசைதிருப்பி வைத்தவர் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் என பேசிக்கொண்டார்கள். ஆனால் அமிர்தலிங்கம் எடுத்தமுயற்சி நடக்கவில்லை. விடுதலைப்புலி பிரபாகரன் தன்னைத்தான் அமிர்தலிங்கம் பரிந்துரைப்பார் என நினைத்து வைத்திருந்தவர். அமிர்தலிங்கத்தின் புது இயக்கத்தைப் பற்றி அறிந்த பிரபாகரன் இதுவரை மிக மிக நெருக்கமாக அமிர்தலிங்கத்தை தோடு நெருக்கமாக இருந்தவர்பின்பு அமிர்தலிங்கத்தை எதிரியாக பாவிக்க தொடங்கினார்.
இந்த விடயங்கள் எல்லாம் அப்போது இயக்க தோழர்களோடு பரிமாறப்பட்ட விஷயங்கள். நெடுமாறன் முயற்சியால் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அதிகாரிகளுடன் நெருக்கம் ஏற்பட்டது ஆயுதப் பயிற்சியும்பெற்றார்கள்.
சம்பவங்கள் முன்பின் இருந்தாலும் சம்பவங்களை பதிவு செய்ய விரும்புகிறேன். இலங்கையிலிருந்து அமிர்தலிங்கம் விமானத்தில் வரும்போது மாறுவேடத்தில் பெண் போல் வேடமிட்டு வந்ததாக பல செய்திகள் அப்போது பத்திரிகைகளில் வந்தன உண்மையில் அப்படி வந்ததாக தெரியவில்லை.
சென்னை வந்தவுடன் எம்ஜிஆர் அப்பொழுது தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராக இருந்த இரா ஜனார்த்தனம் அவர்களை விமான நிலையம் அனுப்பி அமிர்தலிங்கம் கலைஞரிடம் போகாமல் தன்னை மட்டும் சந்திக்க ஏற்பாடு செய்துகொண்டார். ஜனார்த்தனம் எதை கூறி பயமுறுத்தி இருந்தாரோதெரியாது. அமிர்தலிங்கம் கலைஞரை சந்திக்க முதலில் பயந்தார் பின்பு பலமுறை சந்தித்தார்.
இந்தப் செய்திகள் தெரிந்த பல தோழர்கள் இன்னும் இருக்கிறார்கள் இதற்கு மேலும் பல செய்திகளை கழக செய்திகள் மற்ற இயக்க செய்திகள் நேரடியாக தெரிந்த தோழர்கள் மௌனமாக இருப்பது சரியல்ல நீங்களும் உங்கள்நேரடி பங்களிப்பைப் பற்றி எழுதினால் வருங்காலத்தில் பலர் இங்கு நடந்த உண்மையான செய்திகளை படிக்க உதவியாக இருக்கும்.
நான் எழுதுவது எனது சொந்த நேரடிஅனுபவங்களை என்றபடியால். நான் கேள்விப்பட்ட பல விடயங்களை எழுத வில்லை. தயவுசெய்து ஆரம்பகால எமது இயக்கத் தோழர் பார்த்திபன், பெரிய மென்டிஸ் கணபதி ஆர் ஆர்போன்றோர் 83ஆண்டு கலவரத்துக்கு முன்புமுன்பு நடந்த அவர்களின் பங்களிப்பைப் பற்றி எழுதினால் நானும் அறிய ஆவலாக இருக்கிறேன்.
உங்கள அவர்களுக்கும் பல முக்கிய தகவல்கள் தெரியும். அவர்கள் வெளிநாட்டில் இருப்பதாக அறியக்கூடியதாக உள்ளது பல உண்மைகள் தெரிந்த பல தோழர்கள் உங்களுக்குத் தெரிந்த உண்மைகளை செய்திகளை ஒரு பதிவாக போட்டாள் எல்லோருக்கும் நல்லது அறியக்கூடியதாக இருக்கும்
தொடரும் ….