எதிர்க்கட்சித் தலைவர் கல்விச் சான்றிதழை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கல்வித் தகைமைகளை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று முன்வைத்த சவாலுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“சென்ரிஜெட் கான்வென்ட்டில் பாலர் பள்ளிக்குச் சென்றேன். அதன்பின் செயின்ட் தாமஸ் பிரைமரி பள்ளிக்குச் சென்றேன். பிறகு றோயல் கல்லூரிக்குச் சென்றேன். நான் இந்த நாட்டில் GCE (O/L) பரீட்சை எழுதவில்லை.
அதன் பிறகு, நான் இங்கிலாந்தில் உள்ள மில் ஹில் கல்லூரியில் படித்தேன், நான் O/L தேர்வில் தேர்ச்சி பெற்றேன், அதாவது நான் லண்டன் O/L தேர்வில் பங்கேற்றேன்.
நான் மில் ஹில் கல்லூரியில் A/Lபாடத்தில் இரண்டு பி மற்றும் இரண்டு சி களில் எனக்கு A லெவல் முடிவுகள் உள்ளன. அந்த முடிவுகளின் அடிப்படையில், இங்கிலாந்தில் பட்ட படிப்பை படித்தேன்.
அதன் பிறகு, நான் அமெரிக்காவில் முதுகலைப் பட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன், ஆனால் என் தந்தையின் மரணத்திற்குப் பிறகு, அதை முடிக்க முடியாமல் இலங்கைக்கு திரும்பினேன். நான் அமெரிக்காவில் முதுகலை படிக்கும் போது, செனட் ஒருவரிடம் பணியாற்றினேன்.
இலங்கைக்கு திரும்பி அரசியல் பணி செய்து கொண்டிருக்கும் போதே 2021 – 2022 இல் திறந்த பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற இணைந்தேன்.
அங்கு தற்போதைய பிரதமராக இருக்கும் ஹரிணி அமரசூரிய பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவர் ஒரு நல்ல ஆசிரியை.அரசியல் வேலை பழு காரணமாக அதை தொடர முடியவில்லை. எனது தகவல்கள் பொய் என்றால் நான் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் எதிர்கட்சி பதவியிலிருந்து வெளியேற தயார்.
எவருக்காவது சந்தேகம் எழுந்தால் என நான் பிறப்புச் சான்றிதழையும் கொண்டு வந்தேன் என்றார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச .