பிலிப்பைன்ஸ்-சீனா நெருக்கடி, தென் சீனக் கடலில் நடைபெறும் ராணுவப் பயிற்சி.
பிலிப்பைன்ஸுடன் இணைந்து அமெரிக்க மற்றும் ஜப்பானிய இராணுவக் குழு ஒன்று தென் சீனக் கடலில் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் கடற்படை நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த இராணுவப் பயிற்சியால் தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவுக்கு இடையில் சூடான சூழல் அதிகரித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸ் கடற்படைக் கப்பல்கள் பலவற்றைச் சேதப்படுத்தியதாக சீனக் கடற்படை அண்மையில் குற்றஞ்சாட்டப்பட்டதை அடுத்து, அமெரிக்க மற்றும் ஜப்பானியப் படைகளின் பங்களிப்புடன் பிலிப்பைன்ஸ் ஏற்பாடு செய்திருந்த இராணுவப் பயிற்சி நடத்தப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. தென் சீனக் கடல் விவகாரம் தொடர்பாக சீனாவுடன் ஜப்பானும் மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும், பிலிப்பைன்ஸுக்கு இராணுவ மற்றும் நிதி உதவிகளை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளமை சீனாவுக்கு விடுக்கும் எச்சரிக்கை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.