நெடுந்தீவுக்கான அம்புலன்ஸ் படகுச்சேவை தொடர்பான கலந்துரையாடல்.

நெடுந்தீவுக்கான ஹியூமெடிக்கா நிறுவனத்தால் நடத்தப்படும் அம்புலன்ஸ் படகுச்சேவை தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றிருந்தது
ஒவ்வொரு மாதமும் 15 இலிருந்து 20 நோயாளர்கள் வரை இவ்வாறு அம்புலன்ஸ் படகுச்சேவை மூலம் கொண்டுவரப்படுகின்றார்கள்.
இவ்வாறான சேவையை முன்னெடுக்கும் ஹியூமெடிக்கா நிறுவனத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் நன்றிகளைத் தெரிவித்தார்.
இதேவேளை கடற்படையினராலும் தற்போது அம்புலன்ஸ் படகுச்சேவை நடத்தப்பட்டு வருகின்றதனை குறிப்பிட்ட ஆளுநர் அதனைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் கோரிக்கை முன்வைத்தார்.