கோவையில் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்குவதற்காக நாணயங்களை மூட்டைக்கட்டி கொண்டு வந்த கணவரால் நீதிமன்றத்தில் பரபரப்பு!

ஜீவனாம்சம் வழங்குவதற்காக 20 மூட்டைகளில் நாணயங்களை கொண்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்த தம்பதிகள் விவாகரத்து கோரி மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையின் முடிவில் மனைவிக்கு ரூ.2 லட்சம் ஜீவனாம்சம் வழங்ககோரி தீர்ப்பளித்தனர்.

உடனடியாக ஜீவனாம்சம் வழங்குவதற்காக தனது காருக்கு சென்ற நபர் 20 மூட்டைகளை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்திற்கு வந்தார். அந்த மூட்டைகளில் 80,000 ரூபாய்க்கு 1ரூபாய், 2ரூபாய், 5ரூபாய், நாணயங்களாக இருந்தது.

இதை கண்டு நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் அவர் மனைவி அதிர்ச்சியடைந்தனர். இப்படி நாணயங்களை மூட்டையில் வழங்குவதை ஏற்க முடியாது. ரூபாய் நோட்டாக மாற்றி ஜீவனாம்சம் வழங்குங்கள் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

இதனையடுத்து அந்த நபர் நாணய மூட்டைகளை காரில் ஏற்றி புறப்பட்டு சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.