கொள்ளையர்களை எதிர்த்து சண்டையிட்ட வீட்டு உரிமையாளர் (காணொளி)

மலேசியாவில் பட்டப் பகலில் கொள்ளையர்கள் இருவர் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர்.

அந்த வீட்டின் உரிமையாளர் அவர்களை எதிர்த்துப் போராடியிருக்கிறார். ஜோகூர் மாநிலத்தின் மூவார் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 17) மாலை ஐந்து மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக மலேசியாவின் சின் சியூ ஊடகம் தெரிவித்தது.

இச்சம்பவம் பதிவான காணொளிகள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகின்றன.

காணொளிகள் கண்காணிப்புக் கேமராவில் பதிவானவைபோல் தெரிகிறது. கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி பதிவானதாக அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொள்ளையர்கள் வெள்ளை நிறக் காரில் வந்ததாக நம்பப்படுகிறது. வீட்டில் இருந்த ஆடவர், கொள்ளையர்களுடன் சண்டையிடுவது காணொளியில் தெரிகிறது. அந்தக் கொள்ளையர்கள் வந்த காரின் பின் கதவுக் கண்ணாடியை வீட்டு உரிமையாளர் உடைப்பதும் தெரிகிறது.

பின்னர் கொள்ளையர்கள் காரை அங்கிருந்து ஓட்டிச் சென்றனர். கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து ஒன்றும் கிடைக்காமல் அங்கிருந்து புறப்பட்டதைக் காட்டும் காணொளிகளும் இணையத்தில் பகிரப்பட்டன.

கொள்ளையர்களுடன் சண்டையிட்ட ஆடவர், அவருக்கு உதவிய உறவினர் இருவரும் காயமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்துக் காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்கிறது.

Leave A Reply

Your email address will not be published.