ஜனாதிபதி மைத்திரி மன்னிப்பளித்த Royal Park கொலையாளியை அழைத்து வர நீதிமன்ற ஆணை

சிறிசேனவிடம் ஜனாதிபதி மன்னிப்பு பெற்று நாட்டை விட்டு தப்பிச் சென்ற Royal Park கொலையாளியின் இருப்பிடத்தை கண்டறியும் விசாரணைகள் ஆரம்பம்… நீதிமன்றத்தில் தெரிவிக்கும் சட்டமா அதிபர் திணைக்களம்!
ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஜூட் ஷமந்த ஜயமஹாவின் இருப்பிடத்தை கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
ஜூன் 6ஆம் தேதி, ஐக்கிய பெண்கள் மற்றும் ஊடக அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதிவாதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கிய விதம் அரசியலமைப்புக்கு எதிரானது என முடிவு செய்து, அந்த மன்னிப்பு செல்லாது என அறிவித்து உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகளை உள்ளூர் மற்றும் சர்வதேச உதவியுடன் இலங்கைக்கு அழைத்து வர தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டனர்.