டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகளை ஒப்படைக்காத உரிமம் பெற்ற துப்பாக்கி உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது!
1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை இராணுவம் மற்றும் சிறிலங்கா காவல்துறையினரால் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகளை இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்கத் தவறும் அனைத்து உரிமம் பெற்ற துப்பாக்கி உரிமையாளர்கள் தொடர்பான சட்ட அமலாக்க அறிவிப்பில் ,
“பொதுமக்களின் உயிர் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் 2024 நவம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் அளவு மதிப்பாய்வு நோக்கத்திற்காக அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் தெரிவித்துள்ளது.
குறித்த அறிவிப்புக்கு பதிலளித்து, உரிமம் பெற்றவர்களில் 85 சதவீதத்தினர் துப்பாக்கிகளை திருப்பி அளித்துள்ளனர்.
உயிர் பாதுகாப்புக்காக ஒரு நபருக்கு ஒரு துப்பாக்கி மட்டுமே வழங்க பாதுகாப்பு அமைச்சகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது அதுவும் உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில்.
அனைத்து துப்பாக்கி முறையீடுகளும் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஜனவரி 20, 2025 அன்று துப்பாக்கி சோதனை முடிக்கப்படும்.
சிறிலங்கா காவல்துறையினரும் இராணுவத்தினரும் கடந்த காலங்களில் கணிசமான அளவு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை விடுவித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே, 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, இந்த துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை அருகில் உள்ள காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும்.
திட்டமிட்ட திகதிக்கு முன்னர் துப்பாக்கிகளை ஒப்படைக்காத உரிமதாரர்களுக்கு எதிராக 1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.