கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜகவினர் கைது!
கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் அல் உம்மா தலைவர் பாஷா இறுதி ஊர்வலத்துக்கு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதா கட்சியினர், ஹிந்து முன்னணி அமைப்புகள் இணைந்து கருப்பு தின பேரணியில் பங்கேற்றனர்.
தடையை மீறி, காந்திபுரத்தில் இருந்து பேரணியைத் தொடங்கிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி, பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக, கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக கருதப்பட்ட அல் உம்மா தலைவர் பாஷா உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
அவரது இறுதி ஊர்வலம் கடந்த 17ஆம் தேதி நடந்தது. இதற்கு போலீசார் அனுமதி வழங்கியதற்கு தமிழக பாஜக மற்றும் ஹிந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோவையில் போக்குவரத்தை நிறுத்தி, இறுதி ஊர்வலத்துக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கினர். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த ஊர்வலத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டிச.20 கருப்பு தினமாக அறிவித்து பேரணி நடத்தப்போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.