அரச நிறுவனமொன்றின் நியாயமான சேவையை பெற்றுக் கொள்வதில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை – ஜனாதிபதி.

எமது நாட்டின் அரச சேவையை முறையான அரசாங்கப் பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீள் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள புதிய குழு அரசியல் செல்வாக்கு எதுவாக இருந்தாலும் அவை பற்றிய தீர்மானங்களை மேற்கொள்ளும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாரஹேன்பிட்டியில் உள்ள ‘நிலா மதுர’ கட்டிடத்தில் உள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் (20) மாவட்ட செயலாளர்/அரச அதிபர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்க அதிபர் என்பதிலிருந்து மாவட்டச் செயலர் என பட்டங்களை மாற்றிக்கொண்ட இந்த சேவையானது சுமார் 200 வருடங்கள் பழமையானது எனவும் எமது நாட்டை புதிய திசையில் வழிநடத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

ஆனால் இறுதி இலக்கு மற்றும் இலக்கு தொடர்பான தற்போதைய நிலைமை திருப்திகரமாக இல்லை என தெரிவித்த ஜனாதிபதி, அரச நிறுவனமொன்றின் நியாயமான சேவையை பெற்றுக் கொள்வதில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், ஒட்டுமொத்த அரசமைப்பும் சீர்குலைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

உடைந்துள்ள அமைப்பை மீள உருவாக்குவதற்கு நாம் தயாரா இல்லையா என்பதை எம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

ஆணையின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, அரச சேவையும் பொறுப்புக் கூற வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சற்று காரசாரமான தோரணையில் சுட்டிக்காட்டினார்.

அரச சேவையில், கதிரை பிரச்சினை தமக்கு இல்லை எனவும், கதிரையில் அமர யார் இருக்கின்றார்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப, தமது துறையை வழிநடத்தி, வெற்றிக்கு இட்டுச் செல்லும் கதிரைகளில் வெற்றிடமே காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, தனது கடைசி இந்திய விஜயத்தின் போது அதற்கு இணங்கியதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் சுமார் 1500 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார்.

அத்துடன், எதிர்வரும் வருடத்தில் உயர்தரத்தில் சித்தியடையும் கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்க அரசாங்கத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சில நிறுவனங்கள் மற்றும் பதவிகள் கூட எந்த அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது என்பது குறித்த பிரச்சினையாக உள்ளதாகவும், எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, புதிய கட்டமைப்பை உருவாக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீள விசாரணை செய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் செல்வாக்கு எதுவாக இருந்தாலும் தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

அரச சேவையை குறைக்கும் எண்ணம் இல்லை, ஆனால் அரச சேவையை பேணுவதில் சிக்கல் இருப்பதால் அரச சேவையை ஒரே உறுதியுடன் முறையான பொறிமுறைக்கு கொண்டு வர வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தப் பணிகளை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் அதிகாரம் என்ற ரீதியில் தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதாகவும், அரச அதிகாரிகளின் பங்களிப்பின் அடிப்படையில் இந்தப் பணிகள் வெற்றியடைவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மக்களின் எதிர்பார்ப்புகளில் 80% அரச உத்தியோகத்தர்கள் என்று காட்டப்பட்டுள்ளதால் அரசியல் அதிகார சபையின் பணிகளுக்கு அவர்கள் சம்மதம் மற்றும் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், இந்த இருவேறு முரண்பாடான குழுக்கள் அல்ல மாறாக இணக்கமான இரண்டு குழுக்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதன்படி, அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவையின் அபிலாஷைகள் மற்றும் இலக்குகள் சீரமைக்கப்பட்டுள்ளன என்பதையும், இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பணி எமக்கு இருப்பதையும் கடந்த ஆணை காட்டியுள்ளது.

மக்கள் தொடர்பான திட்டங்களும் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் விரைவுபடுத்தப்பட்டு புதிய வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் தூய்மையான இலங்கை திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல், சமூகத்தை கருத்தியல் ரீதியாக மாற்றியமைத்தல், தூய்மையான இலங்கை ஆகிய மூன்று துறைகளின் கீழ் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அந்த பணியை நிறைவேற்றும் போது எந்தவொரு உத்தியோகத்தருக்கும் அசௌகரியம் அல்லது அநீதி இழைக்கப்பட்டால், அந்த நபரின் பாதுகாப்பிற்காக தாம் முன்னிற்பேன் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ. எச். எம். எச். அபயரத்ன, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பிரதமரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். திரு.அலோக பண்டார, மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.