சிடோ புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்வு .
தற்போது கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கின் மயோட் தீவை தாக்கி வரும் சிடோ புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 540 பேர் காயமடைந்தனர் மற்றும் 329,500 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 39,100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.