கிறிஸ்துமஸ் சந்தையில் புகுந்த கார் – 68 பேர் காயம் : இருவர் சாவு (Video)
ஜெர்மனியின் மெக்டபர்க் (Magdeburg) நகரில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்திற்கு இடையே கார் புகுந்ததில் இருவர் மாண்டனர்.
68 பேர் காயமடைந்தனர். அவர்களில் 15 பேரின் நிலை கவலைக்கிடமாய் உள்ளது.
காரைச் செலுத்திய சந்தேக நபர் 50 வயது மதிக்கத்தக்க சவுதி அரேபிய மருத்துவர்.
2006ஆம் ஆண்டில் அவர் ஜெர்மனிக்குச் சென்றதாகத் தெரிகிறது.
வேண்டுமென்றே கூட்டத்திற்குள் காரைச் செலுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.