மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
கல்கத்தாவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் குயின்டன் டி கொக் அரைசதம் கடந்து கைகொடுக்க மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் கல்கத்தா, மும்பை அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற கல்கத்தா அணி தலைவர் மோர்கன் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
கல்கத்தா அணிக்கு குமின்ஸ் (53), கப்டன் மோர்கன் (39) கைகொடுக்க, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது. மும்பை அணி சார்பில் ராகுல் சகார் 2 விக்கெட் கைப்பற்றினார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு குயின்டன் டி காக் (78), கப்டன் ரோகித் சர்மா (35), ஹர்திக் பாண்டியா (21) 16.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.