தைவான் நாடாளுமன்றத்தில் பதற்றம் , ரகளை (Video)
தைவானின் பிரதான எதிர்க்கட்சியான கோமிங்டாங் கட்சி முன்மொழிந்த புதிய வரைவின் அடிப்படையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சர்ச்சைக்குரிய எதிர்க்கட்சி முன்மொழிவுகள் நீதித்துறை அமைப்பில் சீர்திருத்தங்கள் மற்றும் தகுதியற்ற அரசாங்க அதிகாரிகளை அகற்றுவது தொடர்பான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியது.
எனினும், முன்மொழியப்பட்டுள்ள சட்டங்கள் நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது என ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி கூறுகிறது.
இதன்படி, ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபைக்குள் நுழைய முடியாதவாறு எதிர்க்கட்சியினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.