பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும், ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையால் .
இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிட தூதுக்குழுவின் இலங்கைக்கான பணிப்பாளருக்கும் இடையில் பிரதமர் அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கையின் அபிவிருத்திச் செயன்முறையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முக்கிய பங்கு குறித்து இந்த கலந்துரையாடலின் போது மீண்டும் வலியுறுத்தப்பட்டதுடன், இலங்கையின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமையாக புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. புதிய கல்விச் சீர்திருத்தங்கள் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்படுவதை உறுதிசெய்ய பாடசாலைக் கட்டமைப்பு, அதிபர் ஆசிரியர் பயிற்சி மற்றும் மதிப்பீட்டு பொறிமுறைகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.
அதிபர் ஆசிரியர் பயிற்சியை மேம்படுத்துதல் உட்பட, முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களின் மூலம் கல்வித் துறையில் உள்ள சவால்களைத் தீர்ப்பதில் தங்கள் பங்களிப்பு குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரதிநிதிகள் மேலும் கலந்துரையாடினர்.