இன்றைய வளிமண்டலவியல் திணைக்கள அறிவிப்பு .
தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மீதமுள்ள பகுதிகளில் முக்கியமாக மழை இல்லாத வானிலை இருக்கும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.