திட்டமிட்டு கொள்ளையடித்த 03 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நிறுத்தம்!

சிறிபுர ரங்கேத்கம பிரதேசத்தில் இருவரிடமிருந்து மூன்று இலட்சத்து தொண்ணூற்றாயிரம் ரூபா மற்றும் நான்கரை பவுண் தங்கத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் சிறிபுர பொலிஸ் நிலையத்தின் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக பொலன்னறுவை பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா தெரிவித்தார்.

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில், மற்றைய இருவரும்  நேற்று (22ஆம் திகதி) மாலை தெஹியத்தகண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சட்டத்தரணிகள் ஊடாக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்ட சந்தேகத்திற்குரிய இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உட்பட மூன்று பொலிஸாரையும் எதிர்வரும் 24ஆம் திகதி அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துமாறு தெஹியத்தகண்டிய பதில் மேலதிக நீதவான் அசிகா திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சிறிபுர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களையும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக பொலன்னறுவை பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா எமது விசாரணையின் போது தெரிவித்தார்.

மாத்தறை உஸ்கொட தெலிஜ்ஜிவல என்ற முகவரியில் வசிக்கும் தேசிய வைத்தியரை , இவர்கள் சிறிபுர பிரதேசத்தில் நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளிக்கவென சிறிபுரவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அங்கு புதையல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட கல்பெட்டி ஒன்று இருப்பதாக வைத்தியரிடம் தெரிவித்த இருவர் அவரை சிறிபுர ரன்கெத்கம ஏரிக்கு அருகில் அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை அதிகாரிகள் 3 பேர், சம்பவத்தை ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்துவோம் என மிரட்டி , வைத்தியர் உள்ளிட்டோரிடம் பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றதாக புகார் அளித்த நபர்களது முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இச்சம்பவத்திற்கு காரணமான சிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் டிசம்பர் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டு தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். குறித்த குழுவினரை நாளை (24) அடையாள அணிவகுப்புக்கு அனுப்பவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வாவின் ஆலோசனையின் பேரில் பொலன்னறுவை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜே.பி.ஆர். ஜாகொடஆராச்சி, பொலிஸ் பரிசோதகர் ஏ.டி. பண்டார உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவின் விசாரணையின் பின்னர், இந்த மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.